கடந்த மாதம் முதல் வெள்ளி நிலா மாத இதழ் அனைத்து ஊர்களுக்கும் இலவசமாக அஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்டள்ளது கிடைக்காதவர்கள் பின்வரும் அலைப்பேசி எண்னுக்கு எஸ் எம் எஸ் மூலம் தங்களது முகவரியை அனுப்பி வைத்தால் வரும் மாதம் முதல் தங்களுக்கு இலவச பிரதி அனுப்பி வைக்கப்படும்....9841110188, Email: vellinila@gmail.com

11 July 2008

நாகூரில் தீவிபத்து

நாகூரில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. நாகூர் ரயிலடித் தெருவில் உள்ள மைமூன் செரீபா, பாத்திமா ஆகியோரின் வீடுகளில் திடீரென தீப்பிடித்தது. இதில் மைமூன் செரீபா வீட்டிலிருந்த நகை, பணம் உட்பட ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாயின இதன் மதிப்பு 3 லட்சம் இருக்கும் என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த நாகை தொழிலதிபர் ஒருவர் பாதிக்கப்பட்ட மைமூன் செரீபாவிற்கு தனது சொந்தப் பணத்திலிருந்து ரூபாய் 5 ஆயிரம் வழங்கினார்.

நாகூரிலிருந்து... நமது செய்தியாளர்.

09 July 2008

மக்களவை தேர்தலை சந்திக்க தயார்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த இடது சாரிகள் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந் தத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று அறிவித் தனர். இடதுசாரிகள் ஆதரவை விலக் கிக் கொண்டாலும் சமாஜ் வாதி கட்சி மத்திய அர சுக்கு தங்களது ஆதரவை அளிப்பதற்கு முன் வந்துள்ளதால் அரசுக்கு எவ் வித ஆபத்தும் இல்லை என காங்கிரஸ் கூறி வருகிறது.

ஒரிசாவில் இருந்து மக்களவைக்கு 21 எம்.பி.க் கள் தேர்ந்தெடுக்கப் பட் டுள்ளனர். அதில் பிஜு ஜனதா தளம் 11 எம்.பி.க் களையும், பா.ஜ.க. 7 எம்.பி.க்களை யும், காங் கிரஸ் 2 எம்.பி.க்களை யும், ஜனமுக்தி மோர்ச்சா ஒரு எம்.பி.யையும் பெற் றுள்ளன. இந்நிலையில் மத்தி யில் ஆளும் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி எப்போதுவேண்டுமானாலும் கவிழும் நிலை உள்ளதாக வும் தேர்தல் வந்தால் அதனை எதிர்கொள்வ தற்கு ஒரிசாவில் உள்ள பிஜு ஜனதா தளம் தயார் நிலையில் உள்ளதாகவும் அம் மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரி வித்துள்ளார்.

இதுபற்றி நேற்று பத்திரிகையாளரிடம் அவர் தெரிவித்ததாவது : தொடக்கத்தில் இருந்தே பிஜு ஜனதா தளம் அணு சக்தி ஒப்பந்தம் தொடர் பாக மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து வந்துள்ளது. எனவே மக்களவையை நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரி னால் அதனை எதிர்த்து வாக்களிப்போம். அடுத்த தாக வரக்கூடிய நாடாளு மன்றத் தேர்தலை முழு வீச்சில் எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளோம். இவ் வாறு அவர் தெரிவித்தார்.

08 July 2008

ஆதரவை வாபஸ் பெற்றது இடதுசாரி

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை காரணமாக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக இடதுசாரி இன்று முறைப்படி அறிவித்தது. டெல்லியில் இன்று திரளான செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை அறிவித்த மார்க்சிஸ்த் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை நாளை ஜனாதிபதியை நேரில் சந்தித்து முறைப்படி அளிக்க இருப்பதாகவும், இதற்காக ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் முடிவை தெரிவிக்கும் கடிதத்தை வெளியுறவுத் துறை அமைச்சரும், இடதுசாரி - ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் காரத் தெரிவித்தார்.ஜி 8 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் செல்லும் வழியில் நேற்று விமானத்தில் பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன் சிங், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை இறுதி செய்வதற்காக சர்வதேச அணுசக்தி முகமையை அரசு விரைவில் அணுக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.



அவரது இந்த பேட்டி இடதுசாரிகளை மிகுந்த கோபத்திற்குள்ளாக்கியது.அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐமுகூ - இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புகூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என இடதுசாரிகளுக்கு பிரணாப் முகர்ஜி நேற்று கடிதம் அளித்திருந்த நிலையில், பிரதமரின் மேற்கூறிய பேட்டி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை அர்த்தமில்லாமல் ஆக்கிவிட்டதாக கருதியே இடதுசாரிகள் இன்று ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மேற்கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்காது - மன்மோகன்

இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றதால் தமது அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்காது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக இடதுசாரிகள் இன்று அறிவித்த நிலையில், ஜி 8 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிடம், அவர் தங்கியுள்ள ஓட்டலில் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டனர்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், இதனால் ( ஆதரவு வாபஸால் ) தமது அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்காது என்றும், அரசுக்கு அச்சுறுத்தல் ஏதுமில்லை என்றும் பதிலளித்தார்.சர்வதேச அணுசக்தி முகமையை அரசு அணுகப்போவது எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர், விரைவிலேயே அணுகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

கருணாநிதிக்கு கேளிக்கைதான் முக்கியம் - ஜெ

பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும்போது கருணாநிதி கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றது கண்டிக்கத்தக்கது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

1.7.2008 அன்று இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது இதனால். அலுவலகத்திற்கு செல்பவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் வரவில்லை.
ஆனால் இதைப்பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல், ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல தமது திரைப்படத்தை கண்டு களித்து இருக்கிறார் கருணாநிதி.

தமிழக மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் முதலமைச்சர் கருணாநிதி கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றது நாகரீகமற்ற செயல். கருணாநிதியின் இந்த மக்கள் விரோதப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன் என தனது அரிக்கையில் கூறிஇருக்கிறார்.

கோஷ்டி அரசியலுக்கு இடமில்லை !

கே.வி. தங்கபாலு
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி அரசியலுக்கு இடமில்லை என்று புதிய தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் அலங்கரித்த இடத்தை எனக்கு அளித்து, கட்சித் தலைமை வாய்ப்பளித்துள்ளது. இதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

அனைத்துத் தலைவர்களையும் அரவணைத்துச் செல்வேன் என்ற அவர், "காங்கிரஸ் கட்சிக்கு நான் புதியவன் இல்லை. கட்சியில் கோஷ்டி அரசியலுக்கு இடமில்லை. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அவர்களை அரவணைத்துச் செல்வேன்,"என்று கூறினார்.