இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மத விவகாரம் அல்ல என்று முஸ்லிம் அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜமாத்தே உலமா ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பு அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இயற்றியுள்ள தீர்மானம் வருமாறு:இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நாட்டு நலன்களுக்கு உகந்ததா, இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது விஞ்ஞானிகளும், அரசியல்வாதிகளும்தான். இந்த ஒப்பந்தத்துடன் மதத்தை தொடர்புபடுத்துவது தவறானது.
ஆனால் முஸ்லிம் வாக்கு வங்கியுடன் இந்த ஒப்பந்தத்தை தொடர்புபடுத்தும் முயற்சி நடந்து வருகிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் மத விவகாரம் அல்ல. இவ்வாறு அந்த அமைப்பு தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. எனினும், அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்ததற் காக உ.பி. முதல்வர் மாயாவதிக்கு சில முஸ்லிம் மத தலைவர்கள் கடந்த வாரம் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

0 பின்னூட்டம்:
Post a Comment