கடந்த மாதம் முதல் வெள்ளி நிலா மாத இதழ் அனைத்து ஊர்களுக்கும் இலவசமாக அஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்டள்ளது கிடைக்காதவர்கள் பின்வரும் அலைப்பேசி எண்னுக்கு எஸ் எம் எஸ் மூலம் தங்களது முகவரியை அனுப்பி வைத்தால் வரும் மாதம் முதல் தங்களுக்கு இலவச பிரதி அனுப்பி வைக்கப்படும்....9841110188, Email: vellinila@gmail.com

05 June 2008

காயிதே மில்லத் பிறந்த தினம்

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்களின் 113 வது பிறந்த தினம் 05.05.2008 வியாழக்கிழமை நாடு முழுவதும் அனுஷரிக்கப்படுகிறது.

இதையொட்டி திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான், இந்திய யூனியன் முஸ்லிம் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி, பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர்ப் போர்வை அணிவிக்கிறார்கள்.

திருநெல்வேலியில் உள்ள பேட்டையில் கல்வி பயின்ற வளாகத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் காயிதெ மில்லத். கல்லூரிக் கல்வியை பாதியில் நிறுத்தி விட்டு சமுதாயப்பணியிலும், தேசப்பணியிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு உரையாற்றியபோது இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் தகுதி தமிழ் மொழிக்கே உண்டு என்று முழங்கியவர்.
இந்தியா - பாகிஸ்தான் போரின் போது தனது ஒரே மகனை போர்முனைக்கு அனுப்பத் தயார் என்று பிரதமருக்கு எழுதி தனது தேசப்பற்றை நிரூபித்த உத்தமர்.

கேரள மாநிலம் மஞ்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாமல் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் ஆதரவோடு அமோக வெற்றி பெற்ற பெருமையும் அவருக்கு உண்டு.

அரசு சார்பிலும், முஸ்லிம் லீக் சார்பிலும் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments: